Wednesday, March 5, 2014

பொது கவன ஈர்ப்பு .

    .ஆட்சி மாற்றம் வந்தாலும் ,அல்லது புது ஆட்சியர் ,அல்லது புது கமிசனர் வந்தாலோ முதலில் மதுரை மக்கள் நாங்கள் பயபடுவது  எங்கள் தலைக்கு எங்கே கணம் (ஹெல்மட்)கட்டயபடுத்தபடுமோ என்பதுதான் .ஹெல்மட் பாதுகாப்பானது என்பதை 100% மறுப்பதற்கு  இல்லை .அதை கட்டயபடுத்தும்போது தான் சிக்கல் .முக்கியமாக மதுரை நகரை பொறுத்த வரை 7 km  வரை தான் நகர்புற கட்டமைப்பு  உள்ளது.இதிலும் ட்ராபிக் நெரிசல் ,1km இடை வெளியில் பஸ் ஸ்டாப் ,அதில் வேக தடை,ட்ராபிக் சிக்னல் ,.....இப்படி பல தடைகள் உள்ளன .இதை  எல்லாம் மீறி 40 km /h  மேல் ஸ்பீட் எடுக்க அதிரிஷ்டம் வேண்டும் .சிட்டி லிமிட்டுக்கு வெளியே செல்லும்போது ஹெல்மெட்டின் தேவை அவசியமானதுதான் .(பெரும்பாலான விபத்துக்கள் திமிரேடுத்த வேகம்,drenken  டிரைவ் தான் காரணம் .) திடீர்ரென கட்டாய சட்டம் கொணரும்போது மக்களிடம் வெறுப்பு தான் ஏற்படுகிறது .எதுவுமே திணிக்கப்படும்போது எற்றுகொள்ளபடுவது இல்லை.சரியான ரோடு ,நடைபாதை, சிக்னலை மதித்து நடப்பது ,லஞ்சம் தவிர்த்தல் ,பெரிய ,அவசர வாகனங்களுக்கு வழிவிடுதல்,சிக்னல் காட்டி திரும்புதல் ,நிதான வேகம் ...இவைகளை கடைபிடித்தாலே  பாதி விபத்துகள் இருக்காது .இதுவரை 3 முறை கட்டாய ஹெல்மெட் நடைமுறைக்கு வந்து தோல்வியைத்தான் தழுவியது என்பதை யாரும் மறுக்கமுடியாது .சிந்திக்கவும்