Thursday, October 9, 2014

ஆன் லைன் வர்த்தகம் மக்கள் விரும்ப காரணம்


                         
                              ஆன் லைன் வர்த்தகம் மக்கள் விரும்ப காரணம்
                                         

                  சில தினங்களுக்கு முன் ஆன் லைன் கம்பெனி இரண்டு,ஒரே நாளில்  கோடிக்கணக்கில்  வர்த்தகம் பார்த்ததாக செய்தி வந்ததும் பலரும் பல கருத்துக்கள் கூறினர் ,மீடியாக்கள் செய்தியும் வெளியிட்டன .வர்த்தக நிறுவனங்கள் ஐயோ ..ஐயோ ...என கதறுகின்றன .இந்த நிலை ஏன் ...?இந்த நிறுவனங்கள் காலத்தின் ஓட்டத்திற்கு ஏன் மாறவில்லை ?

                  கம்ப்யூட்டர்,ஸ்மார்ட் மொபைல் காலத்திற்கு ஏன் இவர்களும் மாற்றம் அடையாமல் தூங்கி வழிகின்றன? கஸ்டமர்களின் விருப்பம்களை ஏன் அப்டேட் செய்ய முயலவில்லை .......உதாரணமாக  சில தினங்களுக்கு முன் என் துணைவியரிடம் என் கிரடிட்  மற்றும் டெபிட் கார்டு,மற்றும் சிறிது பணமும் கொடுத்து டிரஸ் வாங்க அனுப்பினேன் .   கூட்ட நெரிசல்,பார்க்கிங் சிரமம் ,நீண்ட வரிசை .......இப்படி பட்ட கஷ்டங்களுடன் பொருள்கள் வாங்க போனால்  ...மதுரையின் பல  முக்கிய பெரிய கடைகளில் கூட(பெயர் சொல்ல விரும்ப வில்லை)   கிரடிட்  மற்றும் டெபிட் கார்டு ஏற்க பட வில்லை ....!!!!!!! .
சர்வீஸ் சார்ஜ் 2 சதவீதம் கூட வசூலிக்க படுகிறது .....அதையும் ஏற்கிறோம் .ஆனால் நமது வாய்ப்புகள் நிராகரிக்கபடுகின்றன .
                                                            இப்படி இருந்தால் ஏன்ஆன்  லைன் வர்த்தகம் பக்கம் போகமாட்டார்கள் .சில ஏமாற்று வேலைகள்  ஆங்கங்கே (எங்கேதான் இல்லை )இருந்தாலும் பல வசதிகள் கொட்டிக்கிடக்கிறது  ஆன் லைன் வர்த்தகத்தில் ....நுகர்வோரே இன்றைய ராஜாக்கள் என்பதை இவர்கள் எப்போது உணரபோகிறார்கள் .பொருளாதாரம் போகிற ஸ்பீடுக்கு
மாற்றங்களை அப்டேட் செய்யத்தான் வேண்டும் .மதுரையில்  மட்டும் தான் இப்படியா  என்று தெரிய வில்லை .(சிறந்த வசதிகளை கொண்ட சினிமா தியேட்டர்களில் ஆன் லைன் புக்கிங் மூலம் டிக்கெட் வாங்கி சிரமம் இல்லாமல் படம் பார்க்கும் கூட்டம் கனிச மான முன்னேற்றம் கண்டுள்ளது இங்கே குறிப்பிட பட வேண்டும் . )
                                   வசதிகளை ,வாய்ப்புகளை பெருக்காமல் ,மதிப்பு தராமல் புலம்பு வதில் என்ன பயன் ?  பெரும் முதலீடு செய்து உள்ள நிறுவனங்களுக்கு தான் நஷ்டம் என்பதை சிந்தித்து இனியாவது உணருங்கள்....விளித்து கொள்ளுங்கள் பெரும் ........... வியாபார .........நிருவனங்களே !
 பிடித்திருந்தால்  லைக் ......உண்மை என உணர்ந்தால் கமெண்ட்  ......மாற்றம் வர வேண்டுமெனில் ஷேர் செய்யுங்கள் .  @கல்யாண் ராஜன் .
                                                     

Wednesday, September 10, 2014

அன்புக்கு ஒரு அத்தை .

                                               
                                                      அன்புக்கு ஒரு அத்தை .

                                   அம்மா  பாசம்  அளவிடமுடியாது .......அப்பா பாசம் அண்டத்தை விட பெரிது.....தாய்மாமன் பாசம் தன்மானம் மிக்கது .......மனைவி , தங்கை ,தம்பி,அண்ணன் ,பாசம்  தன்னிகரில்லதது ............கதைகள் ......காவியங்கள் ...திரைப்படங்கள் ...என எல்லா விதத்திலும்  பார்த்த ....அனுபவித்த பாச உறவுகளில் .....உலகம் ஒன்றை மட்டும்  மூடி மறைத்து மங்கலாக்கி விட்டது .அது நமது  தந்தையின் அன்பு தங்கையான  "அத்தை " யின் பாசம் .
        
                                                       கண்களை ஒரு நிமிடம் மூடி உங்கள் அத்தையை மனதில் நிறுத்தி உங்களுக்குள் பகிரப்பட்ட அன்பை நினைவுகூருங்கள் ...........வெளிகொனராத  பல நல்ல தருணங்கள் அங்கே குடத்திற்குள் ஒளிரும் விளக்காய் தெரியவரும் .
                      சிறு வயதில் அத்தை வீட்டுக்கு சென்றபோது உற்றாரிடம் "என் அண்ணன் மகன் " என காட்டி  பெருமித முகத்துடன் அகம் மகிழ்வதாகட்டும் ,வெளி இடங்களுக்கு சந்தோசமாய் கை பிடித்து கூட்டிபோவதகட்டும் ,அப்பாவிடம் கிடைக்காத சலுகையை வீட்டுக்கு வந்த இடத்தில் நயமாய் எடுத்துகூறி நமக்கு பெற்று தருவதாய்  இருக்கட்டும் .......சிறு வயதில் விளையாட்டு களைப்பு தீர மடியில் தலை சாயும்போது  விரலால் கோதி
'அத்தை மடி மெத்தையடி " என பாடாமல்  பாடி தூங்க வைப்பதாகட்டும் ......தலையணை நல்லதாகவே இருந்தாலும் ...இந்த தலையனை மெது ..   இதை வைத்து ... படுடா ...என்ற கணிவாகட்டும் .......தன்  மகளுக்கான பாதுகாப்பை அவளின் தாய்மாமனுக்கு இணையான நம்பிக்கையை நம் மீதும் வைப்பதிலாகட்டும் .......தன்  மகன்கள் உடனான நமது நட்பு ,பாசம் ,அன்பை .....கண்ணால் கண்டு மகிழ்வதிலாகட்டும் ....குடும்பத்திற்கு வந்த கஷ்ட நேரங்களின் போது தேவதையாக வந்து தாங்கி நிற்பதிலாகட்டும் .........அத்தைக்கு  நிகர் அத்தை தான்...........(ஆனாலும் ......வரமுடியா  தூரம் சென்றபின்தான் ....நமக்கும் மறைக்கப்பட்ட அந்த பாசம் ........நெஞ்சகூடுக்குள் வலியாய் பயணப்படுகிறது)
அத்தை  பாசத்திலும் பண்பட்டு வளர்ந்த மருமகன்களுக்கு சமர்ப்பணம்.......!!!!!!           என் மேலும் அளவற்ற பாசம் கொண்ட என் அத்தையின் மலரும் நினைவுகளோடு .............. @கல்யாண் ராஜன் .

Wednesday, March 5, 2014

பொது கவன ஈர்ப்பு .

    .ஆட்சி மாற்றம் வந்தாலும் ,அல்லது புது ஆட்சியர் ,அல்லது புது கமிசனர் வந்தாலோ முதலில் மதுரை மக்கள் நாங்கள் பயபடுவது  எங்கள் தலைக்கு எங்கே கணம் (ஹெல்மட்)கட்டயபடுத்தபடுமோ என்பதுதான் .ஹெல்மட் பாதுகாப்பானது என்பதை 100% மறுப்பதற்கு  இல்லை .அதை கட்டயபடுத்தும்போது தான் சிக்கல் .முக்கியமாக மதுரை நகரை பொறுத்த வரை 7 km  வரை தான் நகர்புற கட்டமைப்பு  உள்ளது.இதிலும் ட்ராபிக் நெரிசல் ,1km இடை வெளியில் பஸ் ஸ்டாப் ,அதில் வேக தடை,ட்ராபிக் சிக்னல் ,.....இப்படி பல தடைகள் உள்ளன .இதை  எல்லாம் மீறி 40 km /h  மேல் ஸ்பீட் எடுக்க அதிரிஷ்டம் வேண்டும் .சிட்டி லிமிட்டுக்கு வெளியே செல்லும்போது ஹெல்மெட்டின் தேவை அவசியமானதுதான் .(பெரும்பாலான விபத்துக்கள் திமிரேடுத்த வேகம்,drenken  டிரைவ் தான் காரணம் .) திடீர்ரென கட்டாய சட்டம் கொணரும்போது மக்களிடம் வெறுப்பு தான் ஏற்படுகிறது .எதுவுமே திணிக்கப்படும்போது எற்றுகொள்ளபடுவது இல்லை.சரியான ரோடு ,நடைபாதை, சிக்னலை மதித்து நடப்பது ,லஞ்சம் தவிர்த்தல் ,பெரிய ,அவசர வாகனங்களுக்கு வழிவிடுதல்,சிக்னல் காட்டி திரும்புதல் ,நிதான வேகம் ...இவைகளை கடைபிடித்தாலே  பாதி விபத்துகள் இருக்காது .இதுவரை 3 முறை கட்டாய ஹெல்மெட் நடைமுறைக்கு வந்து தோல்வியைத்தான் தழுவியது என்பதை யாரும் மறுக்கமுடியாது .சிந்திக்கவும்