Thursday, October 9, 2014

ஆன் லைன் வர்த்தகம் மக்கள் விரும்ப காரணம்


                         
                              ஆன் லைன் வர்த்தகம் மக்கள் விரும்ப காரணம்
                                         

                  சில தினங்களுக்கு முன் ஆன் லைன் கம்பெனி இரண்டு,ஒரே நாளில்  கோடிக்கணக்கில்  வர்த்தகம் பார்த்ததாக செய்தி வந்ததும் பலரும் பல கருத்துக்கள் கூறினர் ,மீடியாக்கள் செய்தியும் வெளியிட்டன .வர்த்தக நிறுவனங்கள் ஐயோ ..ஐயோ ...என கதறுகின்றன .இந்த நிலை ஏன் ...?இந்த நிறுவனங்கள் காலத்தின் ஓட்டத்திற்கு ஏன் மாறவில்லை ?

                  கம்ப்யூட்டர்,ஸ்மார்ட் மொபைல் காலத்திற்கு ஏன் இவர்களும் மாற்றம் அடையாமல் தூங்கி வழிகின்றன? கஸ்டமர்களின் விருப்பம்களை ஏன் அப்டேட் செய்ய முயலவில்லை .......உதாரணமாக  சில தினங்களுக்கு முன் என் துணைவியரிடம் என் கிரடிட்  மற்றும் டெபிட் கார்டு,மற்றும் சிறிது பணமும் கொடுத்து டிரஸ் வாங்க அனுப்பினேன் .   கூட்ட நெரிசல்,பார்க்கிங் சிரமம் ,நீண்ட வரிசை .......இப்படி பட்ட கஷ்டங்களுடன் பொருள்கள் வாங்க போனால்  ...மதுரையின் பல  முக்கிய பெரிய கடைகளில் கூட(பெயர் சொல்ல விரும்ப வில்லை)   கிரடிட்  மற்றும் டெபிட் கார்டு ஏற்க பட வில்லை ....!!!!!!! .
சர்வீஸ் சார்ஜ் 2 சதவீதம் கூட வசூலிக்க படுகிறது .....அதையும் ஏற்கிறோம் .ஆனால் நமது வாய்ப்புகள் நிராகரிக்கபடுகின்றன .
                                                            இப்படி இருந்தால் ஏன்ஆன்  லைன் வர்த்தகம் பக்கம் போகமாட்டார்கள் .சில ஏமாற்று வேலைகள்  ஆங்கங்கே (எங்கேதான் இல்லை )இருந்தாலும் பல வசதிகள் கொட்டிக்கிடக்கிறது  ஆன் லைன் வர்த்தகத்தில் ....நுகர்வோரே இன்றைய ராஜாக்கள் என்பதை இவர்கள் எப்போது உணரபோகிறார்கள் .பொருளாதாரம் போகிற ஸ்பீடுக்கு
மாற்றங்களை அப்டேட் செய்யத்தான் வேண்டும் .மதுரையில்  மட்டும் தான் இப்படியா  என்று தெரிய வில்லை .(சிறந்த வசதிகளை கொண்ட சினிமா தியேட்டர்களில் ஆன் லைன் புக்கிங் மூலம் டிக்கெட் வாங்கி சிரமம் இல்லாமல் படம் பார்க்கும் கூட்டம் கனிச மான முன்னேற்றம் கண்டுள்ளது இங்கே குறிப்பிட பட வேண்டும் . )
                                   வசதிகளை ,வாய்ப்புகளை பெருக்காமல் ,மதிப்பு தராமல் புலம்பு வதில் என்ன பயன் ?  பெரும் முதலீடு செய்து உள்ள நிறுவனங்களுக்கு தான் நஷ்டம் என்பதை சிந்தித்து இனியாவது உணருங்கள்....விளித்து கொள்ளுங்கள் பெரும் ........... வியாபார .........நிருவனங்களே !
 பிடித்திருந்தால்  லைக் ......உண்மை என உணர்ந்தால் கமெண்ட்  ......மாற்றம் வர வேண்டுமெனில் ஷேர் செய்யுங்கள் .  @கல்யாண் ராஜன் .
                                                     

No comments:

Post a Comment