Saturday, June 27, 2015

புரிந்துகொள்வார் உண்டோ .......?

                                               மீண்டும் தலையில் கணம்

         
முன்பெல்லாம் கலெக்டர் ,கமிசனர் ,என்று புதிதாக மாறி வரும்போது திடீர் ஞானோதயம் போல ஹெல்மெட் பாரம் ஏற்றப்படும் .தற்போது நீதி துறை அதில் இணைந்துள்ளது .ஹெல்மெட் நல்ல விஷயம் தான் .தானாய் ஏற்றுக்கொள்ளும் வரை .திணிக்கப்படும்போது தான் பிரச்சனை .பாதுகாப்பு என்ற ஒன்றை தவிர இதில் பல அசௌகரியங்கள் தான்  உள்ளன. ac காரில் பயணிக்கும் கனவான்களுக்கு நடுத்தர வர்க்கத்தின்  பிரச்சனை எங்கே தெரியபோகிறது .இனி குழந்தைகளை நடக்கவிட்டு ஹெல்மெட்டை தூக்கணும் .சினிமா பார்க்கும்போது கூட மடியில் வைத்து (இம்சடா சாமி)பாதுகக்கனும்.கல்யாணம் ,விழா என்றால் வைக்க இடம் தேடனும் .பத்து பேர் வேலை செய்யும் ஆபிஸ் கூட இதெற்கென்று இடம் ஒதுக்கி ஆகனும் .இந்த லட்சணத்தில் பின்னாடி ஒக்காரும் பெண்களுக்கும் இது கட்டாயம் வேறு.!!!! இதெல்லாம் நாங்க செய்யணும் ....ஆனால் ....ரோடு ஒழுங்கா போடாம ,கண்ட இடத்தில வேகதட வச்சு விழாம போகமுடியாம ,ட்ராபிக் ஒழுங்கு பண்ண போதிய காவலர் வைக்காம ,.ஸ்பீட் ரைட் கண்ட்ரோல் பண்ணாம காசு வாங்கி விட்டுட்டு ......ரோடு சைடு மணல் சுத்தம் செய்யாம ,  விழுந்து நாங்க செத்தா ...... இதுக்கு யார்  முழு பொறுப்பு.ஹெல்மெட் போட்டா  சரி ஆகிடுமா ? நாங்க இதெல்லாம் சரி பண்ண மாட்டோம் ......நீங்க ஹெல்மட் போட்டு ஒழுங்கா ஒட்டி நல்லா  இருங்க இல்லன்னா  நாசமா போங்கன்னு சொல்றாங்கலா ..? அரசுக்கும்......காவல் துறைக்கும்......நீதிமான்களுக்குமே வெளிச்சம் .